சொந்த வீடு அவசியம் ?

 



                    சொந்த வீடு என்பது உங்கள் கனவு


சொந்த வீடு(OWN HOUSE) என்பது அனைவருக்கும் அவசியமே! சொந்தமாக ஒரு நல்ல வீடு கட்டிவிட்டால் போதும் வாழ்க்கை முளுமை அடைந்ததாக சொல்கிறார்கள்.

மனிதரின் அடிப்படை தேவைகள் மூன்று . அவை - உணவு , உடை , உறைவிடம் இதில் முதலிரண்டு தேவைகளையும் எளிதில் நிறைவேற்றிக்கொண்டுவிட முடியும். ஆனால் மூன்றாவது அத்தியாவசியத் தேவையான உறைவிடத்தைப் பூர்த்திசெய்வதற்க்கு மனிதன் கூடுதலாகச் செயலாற்றவேண்டி உள்ளது.அதிலும் உறைவிடத்தை அதாவது வீட்டை தனக்கென சொந்தமாக அமைத்துக்கொள்வது மிகவும் கடினமான செயலாகவே உள்ளது.

வீட்டை கட்டிப் பார் என்ற பழமொழியை சும்மாவ சொன்னாற்கள்? அனுபவித்துச் சொல்லியிருக்கிறார்கள். இருப்பினும் , கட்டிய வீடு இப்போது சுலபமாக கிடைத்து விடுகிறது.  


ஆரம்ப கட்டத்தில், ஒரு வீட்டுமனை இடம் அதிகபட்சமாக ஆக்கிரமிக்கப்படாமல் விற்பனைக்கு இருக்கும். நீங்கள் தேர்வுசெய்து முடிக்க உங்களுக்கு ஏராளமான விருப்பங்கள் இருக்கும்.


நீங்கள் விரும்பும் முகம், உங்களுக்குத்த தேவையான தளத்தின் பரப்பளவு மற்றும் சரியான தேர்வைத் தேவையான தளத்தின் பரப்பளவு மற்றும் சரியான தேர்வைத் தேர்ந்தெடுப்பது போன்ற காரணிகளின் அடிப்படையில் சிறந்ததைத் தோர்ந்தெடுக்கும் நல்லதொரு வாய்ப்பு உங்களுக்கு அமையும்.


இப்போதெல்லாம் வீட்டு வாடகை சொந்த வீட்டின் மாதத் தவணை அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் , வாடகை வீட்டில் குடியிருப்பதற்க்குச் செய்யப்படும் செலவைவிட சொந்த வீடு வாங்குவது மேல் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது.


சில வாடகை வீடுகளில்தான் மின்சாரம் தனி இணைப்பாக இருக்கும். பல வீடுகளில் துணை மின் இணைப்பாக இருக்கும். அதற்கு ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கும் வீட்டுக்காரர்களும் உண்டு.


அதுமட்டுமல்லாமல் தண்ணீருக்கு தனிக் கட்டணம், வீட்டு பராமரிப்புக்கு தனிக்கட்டணம் என வாடகைக்குக் குடியிருப்பவர்கள் செலவிடும் தொகை ஏராளம்.


இதற்கு ஆகும் செலவை வீட்டுக் கடனுக்குச் செலுத்தி விடலாம் என்று நினைக்கும் வாடகைதாரர்கள், சொந்த வீட்டை நோக்கிச் செல்கிறார்கள்.




நகரங்கள் விரிவடைந்திருப்பதுகூட வீடு வாங்கும் ஆசையின் மற்றொரு விளைவே. இருக்கும் விலைவாசியில் நகரின் மையப்பகுதியில் வீடு வாங்குவது நடுத்தர குடும்பத்தினருக்கு கனவுதான். 


எனவே புறநகர்ப் பகுதியிலாவது வீடு வாங்கி தங்கள் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக்கொள்கின்றனர். மண்ணில் போட்ட காசு வீணாகாது என்பது இன்றையச் சூழலில் நூற்றுக்கு நூறு உண்மை.



வீடு, நிலம் வாங்குவது சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல, வீடு வாங்குவதற்கான சக்தி இருக்கும் போதே, குறிப்பாக நல்ல வேலையில் வருவாய் ஈட்டும் போதே, அதை வாங்குவது புத்திசாலிதனம். 


கட்டுமானப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தச் சூழலில், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து வீடு கட்டுவது நடுத்தர மக்களுக்கு பெரும் சிரமமாக இருக்கலாம். 


Call : 9843309990
DPM Builders




Comments