2022ல் புது வீடு கட்ட போறீங்களா?


2022ல் புது வீடு கட்ட போறீங்களா? 





 

 வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும் முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின் ஈசானியத்தில் வாஸ்து பூஜை செய்தல் மிக நல்லது.

வீட்டை செப்பனிடும் முன் வாஸ்து நிபுணர்களைக் கொண்டு தீர நிதானமாக ஆராய்ந்த பின் பழுது பார்க்கும் பணியை வேகமாகவும், கவனமாகவும் செய்ய முடிக்க வேண்டும். அந்த வகையில் 2020ம் ஆண்டு பலரை மோசமடைய செய்தது. வீடு கட்ட கூலி ஆட்கள் கிடைக்காமலும், மணல் பிரச்சனை என பல தடங்கல்கள் இருந்தது எனவே வருகிற 2021ம் ஆண்டில் வீடு கட்ட பின்வரும் வாஸ்து டிப்ஸ்கள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

இந்தப் பிரபஞ்சமே நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால்தான் இயங்கி வருகிறது. ஒருவர் வீடு கட்டுவதற்காக ஓர் இடத்தைத் தேர்வு செய்யும்போது, அந்த இடத்தில் பஞ்ச பூதங்களின் அமைப்பு எப்படி அமைந்துள்ளது, அந்த அமைப்பானது வீடு கட்டும் இடத்தில் வளர்ச்சியை உண்டாக்குமா என்பதையெல்லாம் கணித்துக்கூறுவதே வாஸ்து சாஸ்திரம்.

ஒரு மனையின் மையப்பகுதியான பிரம்மஸ்தானத்தில் தேவர்கள் வசிப்பதாக வாஸ்து சொல்கிறது. அதனால், பழைய காலங்களில் வானம் பார்த்த வகையில் பிரம்மஸ்தானத்தை திறந்த வெளியாக விடப்பட்ட வீடுகள் அமைக்கப்பட்டன. அத்தகைய பெரிய வீடுகள் இன்றும் கிராமப்புறங்களில் இருப்பதை பலரும் கவனிக்கலாம். அவை தொட்டி கட்டு வீடுகள் என்று அழைக்கப்பார்கள். அந்த வீடுகளின் அமைப்புப்படி நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் எளிதாக கிடைத்தன. ஒரு மனையின் பிரம்மஸ்தானத்தை கண்டறிய மூன்று விதமான வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.


8 திசைகளுக்கான அதிபதிகள் :

வடக்குத் திசைக்குப் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள். இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் (Vasthu Sasthiram) உருவகப்படுத்துகின்றது.

வட-கிழக்கு  :

வீட்டில் மிக முக்கியமாக இருக்க வேண்டியது இறைவனை வழிபடக் கூடிய பூஜை அறை. இது வீட்டில் வட கிழக்கு பகுதியில் இருப்பது மிகவும் புனிதமானது. சுவாமி படங்கள் கிழக்கு திசை நோக்கி பார்க்கும் படி வைக்க வேண்டும். இந்த திசையில் சேமித்து வைக்கக் கூடிய அறை இருக்கலாம். இந்த பகுதியில் சமையல் அறை, கழிப்பறை, உள்ளிட்டவை இருப்பது ஆகாது. வீட்டிற்காக கிணறு தோண்டும் போது வீட்டின் வடக்கு அல்லது வட கிழக்கு பக்கத்தில் தோண்டுவது மிக அவசியம். வீட்டின் நடுவில் கிணறு அமைப்பது எதிர்மறை பலன்களைத் தரும். கிணறு அமைந்துள்ள இடத்தில் சூரிய ஒளி படும் வகையில் இருப்பது அவசியம்.



வீட்டின் தெற்கு, மேற்கு பகுதிகளில் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும். வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும். வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது.


பூஜை அறை  :

பொதுவாக, பூஜை அறை (Pooja room) சதுர வடிவத்தில் அமைவது சிறப்பு என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, நீளம், அகலம், உயரம் பரிமாணங்கள் சமஅளவுகளில் இருப்பது முக்கியம். காரணம் சதுரமான அமைப்பில் 4 திக்குகளும் சம அளவு கொண்டதாக இருப்பதால் அதற்குள் ஏற்படும் இயல்பான சூழல், மூளை வெளிப்படுத்தும் அலை இயக்கங்களுக்கு இசைவானதாக அமைகின்றன. அதனால், ஆன்மிக ரீதியான வழிபாடுகள் நல்ல விதமாக அமைவது அறியப்பட்டுள்ளது. பூஜை அறை நல்ல சரியான இடத்தில் அமைய வேண்டும். குறிப்பாக, ஈசானிய பகுதி அதற்கு ஏற்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில், பூமியின் மொத்த சாய்மானமும் வடகிழக்காக உள்ளது. அதனால், அண்டவெளியிலிருந்து வரும் சக்தி அலைகள் சாய்மானமாக உள்ள ஈசானியம் என்ற வடகிழக்கு வழியாக நுழைகின்றன. சக்திகளின் தொடக்க முனையாக உள்ள ஈசானியத்தை இறைவனின் இடமாக வாஸ்து குறிப்பிட்டுள்ளது.

தெற்கு - கிழக்கு தென்கிழக்கு :

வீட்டின் முக்கிய அறைகளில் ஒன்று படுக்கை அறை. ஓய்வு என்பது ஒருவரின் உடல் மற்றும் மன சமநிலைக்கு முக்கியமானது. தூக்கம், ஓய்வு எடுக்கக் கூடிய படுக்கை அறை வீட்டின் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது மிகவும் உகந்தது. வீட்டின் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டப்பட வேண்டும். இந்த திசையில் கட்டப்படுவதால் எதிர்மறை ஆற்றலையும் தடுக்கிறது. படிக்கட்டில் ஏறுவது கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி சென்றடைவதாக அல்லது வடக்கிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி ஏறுவதாக இருக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு அல்லது மையத்தில் படிக்கட்டு கட்டக்கூடாது.


Call : 9843309990

Comments